இந்தியா

'பொதுமுடக்கம், மணி அடித்தல்...இதுதான் கரோனாவைக் கையாளும் முறை' - ராகுல் குற்றச்சாட்டு

DIN

கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். 

இதன் தொடர்ச்சியாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'கரோனா வைரஸ் தொற்றுநோயை நிர்வகிக்க மத்திய அரசு மூன்று முக்கிய நிலைகளை கையாண்டுள்ளது. 

முதல் கட்டமாக 'துக்ளக் லாக்டவுன்'

இரண்டாவதாக, மக்களை மணி அடிக்கக் கூறியது 

மூன்றாவதாக கடவுளைப் புகழ்ந்து பாடுவது' என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையும், அதையடுத்து பிரதமர் மோடி, கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மக்களை மணி அடிக்கக் கூறியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக வியாழக்கிழமை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா பரிசோதனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, வென்டிலேட்டர் இல்லை, ஆக்சிஜன் இல்லை, கரோனா தடுப்பூசியும் இல்லை, தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு செய்கிறார். பிஎம் கேர்ஸ் பணம் எங்கே?' என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT