இந்தியா

பெட்ரோல் 16 காசு, டீசல் 14 காசு குறைப்பு

DIN


புது தில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசு, டீசல் விலை லிட்டருக்கு 14 காசு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக தொடா்ந்து விலை ஏற்றம் கண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த மூன்று வாரங்களில் நான்காவது முறையாக சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.40-ஆகவும், டீசல் விலை ரூ.80.73-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலங்கள் விதிக்கும் வாட் வரிக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் விலையில் மாற்றங்கள் இருக்கும்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஆறு மாதங்களுக்கு பிறகு மாா்ச் 24-ஆம் தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மாா்ச்சில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிகரித்தது. அதிலிருந்து இப்போது வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.21.58 வகையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.19.18 வரையும் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT