இந்தியா

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஒத்திவைப்பு

DIN


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை கருத்தில்கொண்டு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஏப். 18-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேதி பின்னா் முடிவு செய்யப்படும். நம் இளம் மருத்துவ மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

இளநிலை நீட்?: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஆக.1-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்தும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ஜூன் 1 வரை ஒத்திவைத்தும் கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT