இந்தியா

மணிப்பூருக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனைச் சான்று கட்டாயம்

PTI


மணிப்பூர் மாநிலத்துக்கு வருபவர்கள் அனைவரும் கரோனா இல்லையென்ற சான்று வைத்திருப்பது கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஏப்ரல் 18 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சுகாதாரத் துறை துணைச் செயலாளர் சோமினிலியன் லெங்கன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், 

மணிப்பூருக்குள் நுழையும் அனைத்து நபர்களும், விமானம் மூலமாகவோ அல்லது சாலை போக்குவரத்து மூலமாகவோ, 
சொந்த ஊருக்கு வருபவராக இருப்பினும் ஆர்டி-பிசிஆரின் சோதனை எடுத்த சான்று கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும் மணிப்பூர் வந்ததிலிருந்து 72 மணி நேரத்திற்கு எடுத்திருக்க வேண்டும் .

ராணுவ மற்றும் மத்திய ஆயுத காவல் படைப் பிரிவு அலுவலர்கள் மணிப்பூருக்குள் நுழைபவர்களுக்கு கரோனா சோதனைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதது, பொது இடத்தில் எச்சில் துப்புதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக 284 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.45,350 வசூலிக்கப்பட்டது. 

மணிப்பூரில் ஒரேநாளில் 18 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 29,579 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் 141 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT