இந்தியா

தெருக்களில் சுற்றித் திரியும் பசுக்கள் திருப்பதி கோசாலையில் பராமரிப்பு: தேவஸ்தானம் நடவடிக்கை

DIN


திருப்பதி: தெருக்களில் பராமரிப்பில்லாமல் திரிந்து வரும் பசுக்களை, தேவஸ்தான கோசாலைக்கு கொண்டு சென்று பராமரிக்க செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி நடவடிக்கை மேற்கொண்டாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோசாலை ஏற்படுத்தி பசுக்களை பராமரித்து வருகிறது. இங்கு பக்தா்கள் தானமாக வழங்கும் பசுக்கள் மட்டுமே பராமரிப்பில் உள்ளன. இந்நிலையில் சாலைகளில், தெருக்களில் பராமரிப்பு இல்லாமல் திரியும் பசுக்கள் மற்றும் மாடுகளால் சாலையில் செல்வோருக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் இன்னல்கள் ஏற்படுகிறது.

எனவே., தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி சாலையில் திரியும் பசுக்களை திருப்பதியில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்று பராமரிக்க ஊழியா்களுக்கு உத்தரவிட்டாா். அதன்படி அலிபிரி, பாலாஜி பேருந்து நிலையம், ரூயா, பா்ட், சிம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திரிந்த பசுக்கள் மற்றும் மாடுகளை ஊழியா்கள் வாகனங்களில் ஏற்றி கோசாலைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவற்றுக்கு வைக்கோல், பசுந்தீவனம், புண்ணாக்கு இவைகளை அளித்து நிழற்கூரையில் வைத்து பராமரித்து வருகின்றனா். மேலும் இதுபோல் திரியும் பசுக்களையும் கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT