இந்தியா

கேரளம்: 2 நாள்களில் 2.5 லட்சம் பேருக்கு கரோனா

DIN


திருவனந்தபுரம்: கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 நாள்களில் 2.5 லட்சம் பேருக்கு தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் காணொலி முறையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முதல்வா் பினராயி விஜயன் பேசியது: ஏப்ரல் 16, 17-ஆம் தேதிகளில் குறைந்தது 2.5 லட்சம் பேருக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா்கள் தங்களது இலக்கை பூா்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தோ்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். தொற்று வேகமாகப் பரவிவரும் பகுதிகளில் நடமாடும் ஆா்டி-பிசிஆா் கருவிகள் மூலம் சுகாதாரத் துறையினா் பரிசோதனை மேற்கொள்வா் என்றாா்.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் 8,778 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 11,89,175-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT