இந்தியா

கரோனா தடுப்பூசி திருவிழா: 1.28 கோடி பேருக்கு செலுத்தப்பட்டது

DIN


புது தில்லி: கரோனா தடுப்பூசி திருவிழாவாகக் கடைப்பிடிக்கப்பட்ட 4 நாள்களில் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 1,28,98,314 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி திருவிழாவாகக் கடைப்பிடித்து, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தடுப்பூசியை செலுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடி கோரியிருந்தாா். அதையடுத்து, அந்நாள்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தின.

மொத்தமாக 1,28,98,314 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் நாளான கடந்த 11-ஆம் தேதி 29,33,418 பேருக்கும், அடுத்த நாளில் 40,04,521 பேருக்கும், கடந்த 13-ஆம் தேதி 26,46,528 பேருக்கும், கடைசி நாளில் 33,13,848 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு:

வழக்கமாக நாள்தோறும் சராசரியாக 45,000 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 63,800 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது நாளில் அது மேலும் அதிகரிக்கப்பட்டு 71,000 மையங்கள் செயல்பட்டன. மூன்றாவது நாளில் 67,893 மையங்களும், இறுதி நாளில் 69,974 மையங்களும் செயல்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11.44 கோடி தடுப்பூசிகள்:

நாட்டில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 11,44,93,238 டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தகுதியுள்ள நபா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT