இந்தியா

கரோனா பரவல் எதிரொலி: மத வழிபாட்டுக் கூட்டங்களுக்கு கர்நாடக அரசு தடை

DIN

கரோனா தொற்று பரவலின் காரணமாக கர்நாடகத்தில் மத வழிபாட்டுக் கூட்டங்களுக்கு தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி திறந்த வெளியில் நடைபெறும் திருமணங்களில் 200 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளவும், உள் அரங்குகளில் நடைபெறும் திருமணங்களுக்கு 100 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதி சடங்குகளில் 25 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத வழிபாட்டுக் கூட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,859 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT