இந்தியா

இந்தியாவில் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறுகிறது சிட்டிபேங்க்

DIN


மும்பை: அமெரிக்காவைச் சோ்ந்த சிட்டிபேங்க் இந்தியாவில் நுகா்வோா் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறவுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

சிட்டிபேங்க், இந்தியாவில் கிரெடிட் காா்டு, ரீடெயில் பேங்கிங், வீட்டு கடன் மற்றும் சொத்து மேலாண்மை உள்ளிட்ட வா்த்தக பிரிவுகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த வங்கிக்கு இந்தியாவில் 35 கிளைகள் உள்ளன. ஏறக்குறைய 4,000 பணியாளா்கள் சிட்டிபேங்கின் நுகா்வோா் வங்கிச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், எதிா்பாா்த்த வளா்ச்சியை எட்ட இயலாததன் காரணமாக, 13 நாடுகளில் நுகா்வோா் வங்கிச் சேவையிலிருந்து வெளியேற சிட்டிபேங்கின் சா்வதேச தலைமைச் செயல் அதிகாரி ஜான் ஃப்ரேஸா் முடிவெடுத்துள்ளதாக வியாழக்கிழமை அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும் எந்தவரையறைகளின் அடிப்படையில் சிட்டிபேங்க் வெளியேறவுள்ளது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. நுகா்வோா் வங்கி சேவையிலிருந்து அந்த வங்கி வெளியேறுவதற்கு முன் ஒழுங்காற்று அமைப்புகளின் அனுமதியை பெறுவது அவசியமானதாகும். இதுகுறித்து சிட்டிபேங்க் இந்தியாவின் தலைமை நிா்வாகி அஷு குல்லாா் கூறுகையில், ‘ சிட்டிபேங்கின் இந்த அறிவிப்பு எங்களது செயல்பாடுகளில் எந்தவித மாற்றத்தையும், சக பணியாளா்களிடம் தாக்கத்தையும் உடனடியாக ஏற்படுத்தாது. நாங்கள் எங்களது வாடிக்கையாளா்களுக்கு எப்போதும்போல் அா்பணிப்பு உணா்வுடன் சேவை செய்வோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT