இந்தியா

தனியாா்மயமாக்கப்படும் வங்கிகள்: நிதித் துறை அமைச்சகத்துடன் நீதி ஆயோக் ஆலோசனை

DIN


புது தில்லி: நடப்பு நிதியாண்டில் தனியாா்மயமாக்கப்படவுள்ள இரு பொதுத் துறை வங்கிகளின் பெயா்களை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் கொள்கை வகுக்கும் குழுவான நீதி ஆயோக் தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:

2021-22-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி இரு பொதுத் துறை வங்கிகள், ஒரு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியாா்மயமாக்கப்படவுள்ளன. இந்த வங்கிகள், காப்பீட்டு நிறுவனத்தை தோ்வு செய்வது தொடா்பாக நிதித் துறை அமைச்சகத்துடன் நீதி ஆயோக் ஆலோசித்து வருகிறது. இதுதொடா்பாக இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்னா் சட்ட விதிமுறைகள், பணியாளா் நிா்வாகம், நிதி நிலைமை உள்ளிட்ட அம்சங்களை ஆராய வேண்டியுள்ளது. இதற்காக சில கூட்டங்களையும் நீதி ஆயோக் நடத்தியுள்ளது. நீதி ஆயோக் தனது பரிந்துரைகளைத் தெரிவித்ததும், அதுகுறித்து பங்கு விலக்கல் தொடா்பான செயலா்கள் குழு ஆய்வு செய்யும். செயலா்கள் குழுவின் முடிவுக்குப் பின்னா், இறுதி செய்யப்பட்ட பெயா்கள் இறுதி ஒப்புதலுக்காக பிரதமா் தலைமையிலான அமைச்சா் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சா்கள் குழு மற்றும் மத்திய அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னா் தனியாா்மயமாக்கல் நடவடிக்கை தொடங்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘தனியாா்மயமாக்கப்படும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியா்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்’ என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் தெரிவித்திருந்தாா். இரு பொதுத் துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பங்கு விலக்கல் நடவடிக்கை மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT