இந்தியா

மேற்குவங்கத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த மம்தா வலியுறுத்தல்

15th Apr 2021 08:35 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று அதிகரித்துவருவதால் மேற்குவங்கத்தில் எஞ்சிய தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திரிணமூல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில், மீதமுள்ள 4 கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில் திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “தொடர்ச்சியான தொற்றுநோய் பரவலின் மத்தியில், மேற்கு வங்க தேர்தல்களை 8 கட்டங்களாக நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவை தொடக்கத்திலேயே திரிணமூல் கட்சி எதிர்த்தது. தற்போது அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு எஞ்சிய தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தும் முடிவை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : corona virus Mamata banerjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT