இந்தியா

தில்லியில் புதிதாக 16,699 பேருக்கு கரோனா தொற்று

15th Apr 2021 08:21 PM

ADVERTISEMENT

தில்லியில் புதிதாக 16,699 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,84,137 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 13,014 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,18,176 பேர் குணமடைந்துள்ளனர்.

112 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,652 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, தில்லியில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 54,309 ஆகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 20.22 சதவிகிதமாக உள்ளது.

Tags : Coronavirus covid19 Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT