இந்தியா

வாராணசிக்கு வரும் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை

IANS

வாராணசிக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 72 மணி நேரத்துக்குள் ஆர்டி-பிசிஆர் சோதனை எடுத்திருப்பது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. 

கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதையடுத்து, புனித நகருக்கு வருவதைத் தவிர்க்குமாறு நாடு முழுவதும் உள்ள யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அன்னபூரணா கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற தலங்களுக்கு வரும் பக்தர்கள் ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று நிபந்தனை விதித்துள்ளது. 

தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் காசிக்கு வருவதைப் பக்தர்கள் தவிர்க்குமாறு யாத்ரீகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் நகரத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வாராணசியில் ஏற்கெனவே இரவு ஊரடங்கு விதித்துள்ள நிலையில், தற்போது மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை கங்கா நதிக்கரைக்கு  வருவதற்கு பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது. 

கடந்த 10 நாள்களில் அதிகபட்ச கரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT