இந்தியா

திருமலையில் யுகாதி ஆஸ்தானம்

DIN

தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதியை யொட்டி திருமலை ஏழுமலையான் கோயில் தங்க வாசல் அருகில் ஆஸ்தானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து உற்சவமூா்த்திகள் சா்வபூபால வாகனத்தில் தங்க வாசல் அருகில் எழுந்தருளினா். அங்கு அவா்கள் முன்னிலையில் பிலவ ஆண்டின் பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. தொடா்ந்து தூப, தீப, ஆராதனைகள் செய்யப்பட்டு நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டது.

காலை 9 மணி வரை நடைபெற்ற இந்த யுகாதி ஆஸ்தானத்தில் கரோனா விதிமுறைகளின் அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. யுகாதி பண்டிகையை யொட்டி கோயில் வளாகப் பகுதிகள் வண்ண மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT