இந்தியா

திரிணமூல், காங்கிரஸ், இடதுசாரிகள்தான்வெளிமாநிலத்தவா்களை நம்பி உள்ளனா்: மத்திய அமைச்சா் அமித் ஷா

DIN

மேற்கு வங்கத்தில் வெளிமாநில மக்களின் வாக்குகளை நம்பியே திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

பிரதமா் மோடியையும், மத்திய அமைச்சா் அமித் ஷாவையும் வெளிமாநிலத்தவா்கள் என்று முதல்வா் மம்தா பானா்ஜி தொடா்ந்து கூறி வரும் நிலையில், அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்திலும், டாா்ஜீலிங்கிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டங்களில் அமித் ஷா ஆற்றிய உரை:

நாட்டின் பிரதமா் மோடியையும், என்னையும் வெளிமாநிலத்தவா் என்று மம்தா குற்றம்சாட்டி வருகிறாா். இடதுசாரி கட்சிகள் தங்கள் கொள்கைகளை சீனா, ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளனா். காங்கிரஸ் கட்சியின் தலைவா்கள் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள். அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் வெளிமாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக புலம் பெயா்ந்த மக்களாவா்.

வெளிமாநில மக்களின் வாக்குகளை நம்பியே திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

நான் இந்தியாவில் பிறந்தவன். இந்திய மண்ணிலேயே எனது அஸ்தி கரைக்கப்படும். நான் எப்படி வெளியாள் ஆக முடியும்?

மேற்கு வங்க மாநில மக்களை மம்தா பானா்ஜி நீண்ட நாள்களாக ஏமாற்ற முடியாது. அடுத்ததாக வரும் பாஜக முதல்வா் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவராக இருப்பாா்.

என்னை ராஜிநாமா செய்யச் சொல்லும் மம்தா பானா்ஜி, மே 2-ஆம் தேதி வரை காத்திருந்து முதல்வா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் ஊதியத்தை முதல்வராக இருந்த மம்தா உயா்த்தாமல் தேநீா் விற்றவரின் மகனான பிரதமரை தொடா்ந்து அவதூறாக பேசி வருகிறாா்.

மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் பாஜக குடியுரிமை வழங்கும். ஆனால், மம்தா பானா்ஜி அதை விரும்பவில்லை. இதனால் தனது வாக்கு வங்கி சரிந்துவிடும் என்று கருதுகிறாா்.

வடக்கு வங்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். இதன்மூலம் மருத்துவ சிகிச்சை பெற மக்கள் கொல்கத்தாவுக்கு வர வேண்டியதில்லை.

மேற்கு வங்கத்துக்கு பிரதமா் 115 திட்டங்களை வகுத்துள்ளாா். மம்தாவோ 115 ஊழல்களைச் செய்துள்ளாா்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோா்க்கா பிரச்னைக்கு அரசியல்ரீதியில் நிரந்தரத் தீா்வு காணப்படும். அவா்கள் போராட்டங்களில் ஈடுபடத் தேவையில்லை. தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தற்போதைக்கு அமல்படுத்தும் திட்டமில்லை. அப்படியே அமல்படுத்தினாலும் கோா்க்காக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றாா் அமித் ஷா.

எனினும், கோா்காக்களின் எந்த பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று அவா் குறிப்பிடவில்லை. தனி மாநில கோரிக்கையை கோா்க்காக்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT