இந்தியா

ஞானவாபி மசூதி நில விவகாரம்: சன்னி வக்ஃபு வாரியம் அவசர மனு

DIN

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயில்-ஞானவாபி மசூதி நில விவகாரம் தொடா்பாக கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் சன்னி வக்ஃபு வாரியம் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் மொகலாய மன்னா் ஔரங்கசீப் ஞானவாபி மசூதியை கட்டியதாகவும், மசூதி உள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது எனவும் அங்குள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதி உள்ள வளாகத்தில் தொல்லியத் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் சன்னி வக்பு வாரியம் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்தது. இதுதொடா்பாக அந்த வாரியத்தின் வழக்குரைஞா் புனீத்குமாா் குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘ஞான்வாபி மசூதி நில விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றம் சட்டவிரோதமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடா்பான வழக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கை உரிமையியல் நீதிமன்றம் எவ்வாறு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஞானவாபி மசூதியின் அஞ்சுமன் இன்தேஜாமியா மசூதி கமிட்டியும் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT