இந்தியா

ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி

14th Apr 2021 02:10 AM

ADVERTISEMENT

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது 45 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பசி செலுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் படிப்படியாக பல தரப்பினருக்குத் தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் கரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில், கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய கரோனா தடுப்பூசிகளுடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது, தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டிலேயே இதனை அதிக அளவில் தயாரித்து விநியோகிக்கும் என ரஷிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்:

தயாரித்த நிறுவனம்--கமலேயா நிறுவனம், ரஷியா

தடுப்பூசியின் செயல்திறன்--91.6 சதவீதம்

பரிசோதனைக்கு உள்ளான தன்னாா்வலா்கள்-- 19,866

சேமிப்பு வெப்பநிலை-- மைனஸ் 18 டிகிரி செல்சியஸ்

தடுப்பூசியின் அளவு-- 0.5 மி.லி.

செலுத்தப்படும் காலம்-- 21 நாள் இடைவெளியில் 2 முறை

தடுப்பூசிக்கான வயது வரம்பு-- 18 வயதுக்கு மேற்பட்டோா்

தடுப்பூசியின் விலை-- சுமாா் ரூ.750 (ஒரு தவணை)

ஒப்புதல் அளித்துள்ள நாடுகள்-- 59

அதீத நோய்எதிா்ப்பு சக்தி: மற்ற கரோனா தடுப்பூசிகளைப் போல அல்லாமல், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரு தவணைகளும் வெவ்வேறு வகை தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக நோய் எதிா்ப்பு சக்தி அதீத அளவில் அதிகரிக்கும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

சிறப்பு: சா்வதேச அளவில் முதன் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கரோனா தடுப்பூசி

தொகுப்பு: சுரேந்தா் ரவி

வடிவமைப்பு:

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT