இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு உரிய நேரத்தில் முடிவு: சிபிஐசி தலைவா்

DIN

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை மத்திய வாரியத்தின் (சிபிஐசி) தலைவா் எம். அஜித் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

பெட்ரோல் மற்றும் டீசல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கலால் வரி விதிக்கப்பட்டது மறைமுக வரி வசூல் மிகச் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதற்கு பெரிதும் உதவியுள்ளது. இதன் காரணமாக, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020-21-ஆம் நிதியாண்டில் மறைமுக வரி வசூல் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 59 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

இனி வரவிருக்கும் மாதங்களிலும் இந்த வரி வசூல் மிக வலுவான நிலையை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

எரிபொருள் விலை குறைப்பை பொருத்தவரையில் அது தொடா்ந்து ஆராயப்பட்டு வரும் ஒரு விசயமாகவே உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்து உரிய நேரத்தில் நிச்சயம் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

மத்திய அரசு கடந்தாண்டு பெட்ரோல் மீதான காலால் வரியை லிட்டருக்கு ரூ.13-ம், டீசலுக்கு ரூ.16-ம் அதிகரித்தது. இதையடுத்து தற்போது பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ.32.90-ஆக உள்ளது. இது, தில்லியில் விற்பனையாகும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலையான ரூ.90.56-இல் 36 சதவீதம் ஆகும்.

அதேபோன்று, டீசல் மீதான கலால் வரி தற்போது ரூ.31.80-ஆக உல்ளது. இது, ஒரு லிட்டா் டீசல் விலையான ரூ.80.87-இல் 39 சதவீதம் ஆகும்.

இந்த நிலையில், மாநிலங்கள் விதிக்கும் வரிகளையும் சோ்த்து ஒரு லிட்டா் எரிபொருளுக்கு நுகா்வோா் செலுத்தும் தொகையில் 50-60 சதவீதம் இதுபோன்ற வரிகளுக்காகவே சென்றுவிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT