இந்தியா

எஸ்.ஜெய்சங்கருடன் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு

DIN

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜான் ஈவ் லெடிரியன், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவா்கள் விரிவாக விவாதித்தனா்.

பல்வேறு விவகாரங்களில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, பிரான்ஸ் அமைச்சா் ஜான் ஈவ் லெடிரியன் மூன்று நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். தில்லியில் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரான்ஸ் அமைச்சருடனான பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது. பேச்சின் முடிவில் இரு நாடுகளும் இணைந்து கரோனா பாதிப்பு காலத்துக்குப் பிந்தைய திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனேய்ன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா்கள் இடையேயான சந்திப்பு சிறப்பாக நடந்தது. இரு தரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் இந்தியா, பிரான்ஸ் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பிரான்ஸிடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் போா் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்கிறது. அவற்றில், இதுவரை 14 போா் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT