இந்தியா

நடிகர்களால் கரோனா படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு: மகாராஷ்டிர எம்.எல்.ஏ.

DIN

திரைத்துறை பிரபலங்கள் மற்றும் நட்சத்திர விளையாட்டு வீரர்களால் பொதுமக்களுக்கு கரோனா படுக்கைகள் கிடைப்பதில்லை என்று மகாராஷ்டிர எம்.எல்.ஏ. அஸ்லாம் ஷாய்க் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சில திரைத்துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கரோனா படுக்கைகள் கிடைப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அஸ்லாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, சில சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சிறிதளவு கரோனா அறிகுறி அல்லது அறிகுறியற்று இருந்தால் பெரிய மருத்துவமனையில் நீண்ட நாள்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சாதாரண மக்களுக்கு அல்லது தீவிர கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT