இந்தியா

அதிகரிக்கும் நோயாளிகள்: இந்தூரில் தற்காலிக கரோனா சிகிச்சை மையம் அமைப்பு

13th Apr 2021 06:07 PM

ADVERTISEMENT

இந்தூரில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து அங்கு மேலும் ஒரு தற்காலிக கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. 

மத்தியப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு கண்ட்வா சாலையில் உள்ள ராதா சுவாமி சத்சங் வியாஸ் மைதானத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அவசர காலம் கருதி இரு தினங்களில் இந்த மையத்தை அமைக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

'முதல் கட்டத்தில் 500 படுக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 50 படுக்கைகளைக் கொண்ட 10 தொகுதிகள் இருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள். இரண்டாவது கட்டத்தில், படுக்கைகளின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரிக்கப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிக்கப்படும்' என்று கரோனா கண்காணிப்பு நோடல் அதிகாரி டாக்டர் அமித் மலாக்கர்தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த மையத்தில் நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT