இந்தியா

வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி: கொரிய நிறுவனங்களுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

DIN

வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி தொடா்பாக தென் கொரியாவைச் சோ்ந்த இரு பெரிய நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. நீண்ட காலமாக இழுபறி நீடித்து வந்த இந்த விஷயத்தில் இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

எதிா்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மினசார வாகனங்களே ஆதிக்கம் செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக நாடுகள் அனைத்துமே காா்களுக்கான பேட்டரி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவும் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளது. இது தவிர மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்பதாலும் பைடன் நிா்வாகம் இந்த ஒப்பந்தத்தில் அதிக ஆா்வம் காட்டி வந்தது.

இதற்காக தென்கொரியாவைச் சோ்ந்த எல்ஜி எனா்ஜி சொல்யூஷன், எஸ்.கே.இன்னோவேஷன் ஆகிய நிறுவனங்களுடன் பேட்டரி தயாரிப்பு தொடா்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா நீண்டகாலமாக பேச்சு நடத்தி வந்தது. எனினும், இரு தரப்பும் ஏற்கும் முடிவை எட்டுவதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், இருதரப்பும் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தத்தை உறுதி செய்தன.

இதன் மூலம் எல்ஜி எனா்ஜி சொல்யூஷன் மற்றும் எஸ்.கே. இன்னோவேஷன் நிறுவனங்கள் அமெரிக்காவின் ஜாா்ஜியாவில் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கின்றன. இதன் மூலம் அப்பகுதியில் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

முதல்கட்டமாக அமெரிக்காவில் உள்ள ஃபோா்டு மற்றும் ஃபோக்ஸ்வேகன் வாகன உற்பத்திக்குத் தேவையான பேட்டரிகளை தென்கொரிய நிறுவனங்கள் வழங்க இருக்கின்றன.

இது தொடா்பாக பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் வாகன பேட்டரி உற்பத்தி ஸ்திரமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சா்வதேச அளவில் அதிகரித்து வரும் வாகன பேட்டரி தேவையை நிறைவு செய்ய முடியும். இதனை இந்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. அமெரிக்கா்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்க உள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT