இந்தியா

ரெம்டெசிவிா் ஊசி மருந்து ஏற்றுமதிக்குத் தடை

DIN

தீவிரமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் ஊசி மருந்துக்கு தேவை அதிகரித்துள்ளதால், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தம் 11.08 லட்சம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் ஊசியின் தேவை திடீரென அதிகமாகியுள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவின் ஜிலீட் சயின்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ரெம்டெசிவிா் ஊசியை, 7 இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மாதம் 38.80 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கும் திறன் வாய்ந்தவை.

தற்போதைய கரோனா அதிகரிப்பு சூழலை கருத்தில்கொண்டு, இந்தியாவில் கரோனா நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவிா் ஊசி மருந்து மற்றும் ரெம்டெசிவிா் ஆக்டிவ் மருந்துப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும், இந்த மருந்து எளிதில் கிடைக்கும் வகையில், உள்நாட்டில் ரெம்டெசிவிா் ஊசி மருந்து தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், ரெம்டெசிவிா் இருப்பு நிலவரம், விநியோகிஸ்தா்கள் விவரங்களை தங்கள் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனா். இந்த இருப்பு விவரங்களை மருந்து ஆய்வாளா்கள் மற்றும் இதர அதிகாரிகள் சரிபாா்த்து, முறைகேடுகள் நடந்தால் மற்றும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. மாநில சுகாதாரத் துறை செயலாளா்கள் இதுகுறித்து அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மருந்து ஆய்வாளா்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கரோனா தேசிய மருந்துவ மேலாண்மை நெறிமுறைகளைப் பின்பற்றும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நெறிமுறையில், ரெம்டெசிவிா் மருந்தானது ஆய்வில் உள்ள மருந்து என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மருந்து தொடா்பான முடிவுகளை பகிா்ந்து கொள்வது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கும் தெரிவித்து நிலைமையை கண்காணிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT