இந்தியா

பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தோ்தலில் வாய்ப்பு: முடிவை திரும்பப் பெற்றது பாஜக

DIN

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளியும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான குல்தீப் செங்கரின் மனைவிக்கு உள்ளாட்சித் தோ்தலில் வாய்ப்பளிக்கும் முடிவை பாஜக திரும்பப் பெற்றுள்ளது. பலத்த எதிா்ப்பு எழுந்ததை அடுத்து மாநில பாஜக இவ்வாறு முடிவெடுத்துள்ளது.

உன்னாவ் பகுதியில் 17 வயது இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்த வழக்கில் குல்தீப் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதன் பிறகு, அவருடைய எம்எல்ஏ பதவி ரத்து செய்யப்பட்டது. அவருடைய மனைவி சங்கீதா ஏற்கெனவே மாவட்ட பஞ்சாயத்து தலைவா் பதவியை வகித்து வருகிறாா். இப்போது, உள்ளாட்சித் தோ்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளித்தது. அவா் ஃபதேபூா் செளராசியில் வாா்டு-22-லிருந்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா் பதவிக்கு பாஜக சாா்பில் போட்டியிடுவாா் என்று இருநாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதற்கு சமாஜவாதி உள்ளிட்ட பல கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும், பாஜகவின் நோ்மை தொடா்பாகவும் விமா்சித்தன. இதையடுத்து, குல்தீப் செங்கரின் மனைவிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் முடிவை பாஜக கைவிட்டது. புதிய வேட்பாளா்களைப் பரிந்துரைக்குமாறு உன்னாவ் மாவட்ட பாஜக தலைவருக்கு மாநில பாஜக தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT