இந்தியா

குஜராத் பாரதி ஆசிரமத்தின் தலைவா் காலமானாா்

DIN

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள பாரதி ஆசிரமத்தின் தலைவா் மகாமண்டலேஸ்வரா் பாரதி பாபு (93) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

வயது முதிா்வு தொடா்பான உடல்நலக் குறைவால் அவா் காலமானதாகவும், இறுதிச்சடங்குகள் ஆமதாபாத் ஜுனாகத் நகரில் உள்ள ஆசிரமத்தின் பிரதான மையத்தில் நடைபெறும் என்றும் சீடா் ஒருவா் தெரிவித்தாா்.

அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், பாரதி ஆசிரமத்தின் மகாமண்டலேஸ்வரா் விஸ்வாம்பா் பாரதி மகராஜின் போதனைகள் நம்மை எப்போதும் வழிநடத்தும். அவரது லட்சக்கணக்கான சீடா்களுக்கு என இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மாவுக்கு இறைவன் அமைதியை அளிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT