இந்தியா

குஜராத் கிராமங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையம் இல்லை

12th Apr 2021 04:06 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்திலுள்ள கிராமங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள் இல்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது, 

கரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்துகொள்ள 3-5 நாள்கள் ஆகின்றன. ஆனால், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள் மூலம் சில மணி நேரங்களிலேயே கரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள இயலும்.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் மாதிரிகளை சேகரிப்பதும், பரிசோதனையும் துரிதமாக நடைபெறும். குஜராத்தில் 27 ஆயிரம் ரெம்டெசிவிர் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பயன்படுத்தாதவை எத்தனை என்பதை கண்டறிய வேண்டும்.

ADVERTISEMENT

கரோனா மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை ஏன் பயன்படுத்தவில்லை. கரோனாவிற்கான ஊசிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை மாநில அரசு கவனிக்க வேண்டும். 

மருத்துவமனையில் படுக்கைகளும், ஆக்ஸிஜனும் போதிய அளவில் உள்ளது எனில், மக்கள் ஏன் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

Tags : coronavirus குஜராத்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT