இந்தியா

சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளது: நவாப் மாலிக் 

12th Apr 2021 02:33 PM

ADVERTISEMENT

பித்தப்பை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாகர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
80 வயதாகும் சரத் பவாருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டு, மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி அவசர என்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னா், அவருக்கு 15 நாள்களுக்குப் பிறகு பித்தப்பையை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வது என மருத்துவா்கள் தீா்மானித்தனா். 
அதன்படி, அவா் தனியாா் மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். இந்தநிலையில் சரத் பவாருக்கு பித்தப்பை அறுவைச் சிகிச்சை இன்று வெற்றிகரமாக முடிந்தது. 
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தனது சுட்டுரையில், எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பித்தப்பை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sharad Pawar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT