இந்தியா

மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜாவுக்கு கரோனா தொற்று

12th Apr 2021 06:05 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ள மெஹபூபா முப்தி, தற்போது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இல்திஜா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லாவும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 915 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு 1,38,390 ஆகவும், இறப்பு 2,034 ஆகவும் அதிகரித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT