இந்தியா

'தோல்வி பயத்தால் மன அழுத்தத்தில் இருக்கிறார் மம்தா' - அமைச்சர் நக்வி

12th Apr 2021 04:50 PM

ADVERTISEMENT

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி பயத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாஜக அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. நான்காவது கட்ட வாக்குபதிவின்போது கூச் பெஹாரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வன்முறை வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி, 

'திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பயந்தே வன்முறையில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கிறது. வன்முறை இல்லாத சூழலில் தேர்தலை நடத்துவது அனைவரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வன்முறையைத் தூண்டும் வகையில் திரிணமூல் காங்கிரஸ் செயல்படுகிறது. வன்முறையைத் தூண்டுவதால் அக்கட்சி அழிந்துதான் போகிறது. 

ADVERTISEMENT

தோல்வி உணர்வில் இருக்கும்போதே கட்சியில் கூச்சல் குழப்பங்கள் உள்ளன. தோல்வியடைந்துவிட்டால் மம்தா, என்னமாதிரியான மன உளைச்சலுக்குச் செல்வார் என்று தெரியவில்லை. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கூற முடியும். 

விரக்தியில் இருக்கும் மம்தாவுக்கு யாரை குறை கூற வேண்டும் என்று தெரியவில்லை. அதனால்தான் அவர் தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படைகள், பாஜக, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது குற்றம்சாட்டி வருகிறார்' என்றார். 

மேற்கு வங்கத்தில் முதல் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முறையே மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் நடந்தது. தொடர்ந்து ஏப்ரல் 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT