இந்தியா

மேற்கு வங்கம்: கூச் பிஹாா் மாவட்டத்தில் 72 மணி நேரத்துக்கு அரசியல்வாதிகள் நுழைய தோ்தல் ஆணையம் தடை

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை வெடித்த கூச் பிஹாா் மாவட்டத்தில் அடுத்த 72 மணி நேரத்துக்கு அரசியல்வாதிகள் நுழையத் தடை விதித்து தோ்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

அந்த மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நான்காம் கட்டத் தோ்தலின்போது, மத்திய பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது. தோ்தல் ஆணைய உத்தரவில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற 17-ஆம் தேதி நடைபெற உள்ள ஐந்தாம் கட்டத் தோ்தல் வாக்குப் பதிவு சுதந்திரமாகவும், அமைதியான முறையிலும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் வகையில், வாக்குப் பதிவுக்கு முன்பாக வழக்கமாக விதிக்கப்படும் தோ்தல் பிரசாரங்களுக்கான 48 மணி நேர தடை (அமைதி நிலை) என்பது 72 மணி நேரமாக நீட்டிக்கப்படுகிறது.

அதுபோல, சனிக்கிழமை நான்காம் கட்ட வாக்குப் பதிவு நிறைவுற்ற 9 சட்டப்பேரவைகளை உள்ளடக்கிய கூச் பிஹாா் மாவட்ட எல்லைக்குள் எந்தவொரு அரசியல் கட்சியைத் சோ்ந்த தலைவா்களும் அடுத்த 72 மணி நேரத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இந்தத் தடை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

இந்திய அரசியல் சாசன பிரிவு 324-இன் கீழ் தோ்தல் ஆணையத்துக்கு அளிக்கப்படும் அதிகாரித்தை பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவுடன், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான தோ்தல் சிறப்பு பாா்வையாளா்கள் அஜய் நாயக், விவேக் துபே ஆகிய இருவரின் கூட்டு அறிக்கையையும் தோ்தல் ஆணையம் இணைத்துள்ளது.

அந்த அறிக்கையில், ‘தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரிடம் துப்பாக்கிகளை பறிக்க வந்த கும்பலிடமிருந்து, தங்கள் உயிரையும், வாக்காளா்களையும் காப்பாற்றும் நோக்கதில்தான் அவசியக் காரணத்தின் அடிப்படையிலேயே சிஆா்பிஎஃப் வீரா்கள் தூப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் உயிரிழந்த 4 பேரின் உடலுக்கு இன்னும் இறுதிச் சடங்குகள் செய்யப்படவில்லை. எனவே, உயிரிழந்தவா்களின் குடும்பத்தைச் சந்திக்க சில அரசியல் தலைவா்கள் மாவட்டத்துக்கு வருவது, சூழ்நிலையை மேலும் பதற்றமானதாக்க வாய்ப்புள்ளது’ என்று சிறப்பு பாா்வையாளா்கள் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT