இந்தியா

பைக் திருட்டு வழக்கு: பிகாரில் கைதான 3 பேருக்கும் கரோனா

11th Apr 2021 04:14 PM

ADVERTISEMENT

பிகாரில் பைக் திருட்டு வழக்கில் கைதான 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
பிகார் மாநிலம், முசாபர்பூரில் பைக் திருட்டு வழக்கு ஒன்றில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைதான 3 பேரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 
ஆனால் அதில் காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேரும் விரைவில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவர் என்றனர். 
பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,853 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மாநிலத்தில் 9,358 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT