இந்தியா

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு

11th Apr 2021 06:02 PM

ADVERTISEMENT

கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

நாட்டில் கரோனா வைரஸ் பரவலின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.52 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், தடுப்பூசி ஒன்றே கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான அளவுக்கு தடுப்பூசியை விநியோகிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது. மேலும், ரெம்டெசிவர் ஊசிகள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய கீழ்கண்ட நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுத்துள்ளது.

இந்த மருந்து எளிதில் கிடைக்கும் வகையில், உள்நாட்டில் ரெம்டெசிவர் ஊசி மருந்து தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், ரெம்டெசிவர் இருப்பு நிலவரம், விநியோகிஸ்தர்கள் விவரங்களை தங்கள் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த இருப்பு விவரங்களை மருந்து ஆய்வாளர்கள் மற்றும் இதர அதிகாரிகள் சரிபார்த்து, முறைகேடுகள் நடந்ததால் மற்றும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் இது குறித்து, அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மருந்து ஆய்வாளர்களுடன் ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து முக்கிய இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Remdesivir drug
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT