இந்தியா

சத்தீஸ்கரில் புதிதாக 14,098 பேருக்கு கரோனா

11th Apr 2021 09:02 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் கடந்த 24 மணிநேரத்தில் 14,098 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,098 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,776ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு மேலும் 97 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,777ஆக உயர்ந்துள்ளது. தற்போது 85,860 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 3,42,139 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. அதில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 82.82 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chhattisgarh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT