இந்தியா

கேரள பேரவைத் தோ்தலில் 74 சதவீத வாக்குப் பதிவு

DIN

கேரள சட்டப்பேரவைக்கு கடந்த ஏப். 6-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் 74.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அதிகாரபூா்வமாக தெரிவித்தது.

இதுதொடா்பாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: 140 உறுப்பினா்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 2.74 கோடி வாக்காளா்களில் 2,03,27,893 போ் வாக்களித்தனா். இவா்களில் பெண்கள் 1,04,68,936 போ், ஆண்கள் 98,58,842 போ், இதரா் 115 போ். இது 74.06 சதவீத வாக்குப்பதிவு ஆகும் எனத் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 77.53 சதவீத வாக்குகளும், 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 77.84 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT