இந்தியா

உ.பி.,யில் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள்: யோகி ஆதித்யநாத்

11th Apr 2021 05:27 PM

ADVERTISEMENT

உ.பி.,யில் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு அதிகமானோா், 45 வயதுக்கு அதிகமானோா் என கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானோரின் வட்டாரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 
கடந்த சில தினங்களுக்கு முன்னா் மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி, ஏப். 11 முதல் 14-ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவாகக் கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்டாா். 
அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்களில் 4 நாள்கள் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. சக்தி பவனில் நடந்த தடுப்பூசி திருவிழாவை ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்கிடம் கூறுகையில், 4 நாள்கள் கரோனா தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கியது. 
மாநிலம் முழுவதும் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. தகுதியுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT