இந்தியா

ராகுல் ஏன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை? ரவி சங்கர் பிரசாத்

DIN


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏன் இன்னமும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று மத்திய இணையமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதிக்காமல் வெளிநாடுகளுக்கு அவற்றை மத்திய அரசு ஏற்றுமதி செய்து வருவதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய இணையமைச்சர் அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ரவி சங்கர் பிரசாத் தனது சுட்டுரைப் பக்கத்தில், இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை, ஆனால், ராகுல் கவனம் செலுத்துவதில்தான் பற்றாக்குறை உள்ளது. இன்னமும் ராகுல் காந்தி ஏன் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை? இவற்றையெல்லாம் மேற்பார்வைதான் செய்வாரா? இல்லை அவருக்கு கரோனா தடுப்பூசி தேவையில்லையா? பல வெளிநாட்டுப் பயணங்களின்போது எங்கேனும் ஒரு தடுப்பூசியை செலுத்திக் கொண்டாரா? அல்லது அதுபற்றி வெளியிட விரும்பவில்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டிருப்பது கரோனா தடுப்பூசி பற்றாக்குறைய அல்ல, சுகாதார அமைப்பின் உள்கட்டமைப்பில் தான் குறை என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி பற்றாக்குறை தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். அதிலும், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியிருந்தார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அண்மையில் கடிதம் எழுதியிருந்தது.

எனினும், இதனை மத்திய சுகாதாரத் துறை ஏற்க மறுத்துவிட்டது. ‘கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவா்கள் அனைவருக்கும் அதனை செலுத்த முடியாது. யாருக்கெல்லாம் தடுப்பூசி தேவைப்படுகிறதோ, அவா்களுக்கு மட்டுமே வழங்க முடியும்’ என்று கூறிவிட்டது.

இந்நிலையில் ராகுல் காந்தி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவது மிகவும் கவலையளிக்கும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆனால், மத்திய அரசு கோடிக்கணக்கான இந்தியா்களின் உயிரை கரோனாவிடம் பணயம் வைத்துவிட்டு, தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுவும் தவறான செயல்பாடு. கரோனா தடுப்பூசி ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்திய மக்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும். கரோனா தடுப்பு விஷயத்தில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டாமல் மத்திய அரசு உதவ வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போரிட்டால்தான் கரோனாவை ஒழிக்க முடியும்’ என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT