இந்தியா

மகாராஷ்டிரத்தில் கள்ளச் சந்தையில் கரோனா தடுப்பூசி விற்பனை: 4 பேர் கைது

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்பூசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. இங்கு நாள்தோறும் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. 
தடுப்பூசி ஒன்றே கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துவரும் நிலையில் மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. 
மத்திய அரசு போதுமான அளவுக்கு தடுப்பூசியை விநியோகிக்கவில்லை என்று மாநில அரசும் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்பூசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து காவல் ஆணையர் கிருஷ்ணா பிரகாஷ் கூறுகையில், கள்ளச் சந்தையில் 40 ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஊசி மருந்துகள் மீட்கப்பட்டன என்றார். 
மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT