இந்தியா

ஜூலையில் புதிய கட்சி தொடங்குகிறார் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரி

DIN


ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜேசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி தெலங்கானாவில் ஜூலை 8-ஆம் தேதி புதிய கட்சியைத் தொடங்கவிருக்கிறார்.

தெலங்கானாவில் 2023-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் ஜூலை 8-ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சியை ஷர்மிளாதொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

அன்றைய தினம், கட்சியின் பெயர், சின்னம், கொள்கை ஆகியவை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் இந்த முடிவை, அவரது அம்மா வரவேற்றுள்ளார்.

மேலும், தெலங்கானாவில் காலியாகவிருக்கும் 1.91 லட்சம் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, ஷர்மிளா ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT