இந்தியா

முன்களப் பணியாளர்கள் ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தெலங்கானா முதல்வர் அறிவுறுத்தல்

9th Apr 2021 11:26 AM

ADVERTISEMENT

 

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் முன்களப் பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார். 

கரோனா தடுப்பூசி இயக்கம் குறித்த அன்றாட நடவடிக்கைகளை தினமும் முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான பிற அதிகாரிகளுடன் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

மேலும்  அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். பிசிஆர் சோதனைக்கான கருவிகளை மாவட்ட அதிகாரிகள் கூடுதலாக கேட்டுப் பெற வேண்டும். 

கத்வால், வனபர்த்தி, கம்மம், நிர்மல், மஞ்சேரியல், கமரெட்டி, சங்கரெட்டி, மேடக், ஜாக்டியல், பெடப்பள்ளி, ராமகுண்டம், போங்கிர், ஜங்கான் மற்றும் விகராபாத் ஆகிய இடங்களில் சோதனை மையங்களை அமைக்க வேண்டும். 

பொதுமக்கள் அனைத்துவிதமான கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வைரஸ் பரவாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

முகக்கவசம்அணியாவிட்டால் ரூ .1,000 அபராதம் விதிக்க வேண்டும். தொற்றுப் பரவலைக் குறைக்க கண்டிப்பாக  அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT