இந்தியா

தாணேவில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: 18 பேர் பலி

9th Apr 2021 11:34 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 

இதுதொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

தாணேவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,167 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,61,434 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி 6,638 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உள்ளது. 

இதுவரை, 3,06,079 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மீட்பு விகிதம்  84.68 சதவீதமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 48,171 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : தாணே கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT