இந்தியா

41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு

9th Apr 2021 10:11 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 41 பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டு முதல் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த உயர்கல்வித்துறை தீர்மானித்துள்ளது. 

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு ஜூன் மாத இறுதியில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் கரோ தெரிவித்ததாவது: 
புதிய கல்வி கொள்கையின்படி நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து படிக்க முடியும். 

இளநிலை, முதுகலை, மற்றும் முனைவர் படிப்புகள் உள்பட மத்திய பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் அனைத்து படிப்புகளுக்கும் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு பரிந்துரைத்துள்ள நிபுணர் குழு ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வு வினாக்கள் குறிக்கோள் வகை மற்றும் விரிவான பதில் எழுதுதல் என இரு பிரிவுகளை கொண்டதாக இருக்கும். தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையியேலே மாணவர் சேர்க்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags : Central Universities Entrance Test
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT