திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதில் மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்.
ADVERTISEMENT
தயவுசெய்து கரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.