இந்தியா

கரோனா தடுப்பூசியில் தேவை - விருப்பம் என்ற விவாதம் அபத்தமானது: ராகுல் காந்தி

7th Apr 2021 02:56 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவைகள்- விருப்பங்கள் என்ற வாதம் அபத்தமானது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மேலும், ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பைப் பெற தகுதியானவர் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தடுப்பூசிகளை அதிகளவு கொள்முதல் செய்து அனைத்து வயதினருக்கும் வழங்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி இயக்கத்தில் முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags : rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT