இந்தியா

ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

7th Apr 2021 10:38 AM

ADVERTISEMENT

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி  விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 

வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வது குறித்த இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கை குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ் தெரிவித்ததாவது:

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

எனவே, ரெப்போ வட்டி விகிதம் 4% என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும், இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார். 

மேலும், 2021-22 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.5% ஆக தக்கவைக்கப்படும். 

2020-21 நிதியாண்டில் பணவீக்கம் 2020-21 நான்காம் காலாண்டில் 5% ஆக உள்ளது; இது 2021-22 நிதியாண்டின் முதல் பாதியில் 5.2%; மூன்றாம் காலாண்டில் 4.4% ஆகவும், நான்காம் காலாண்டில் 5.1% ஆகவும் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்றார். 

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

Tags : ரிசர்வ் வங்கி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT