இந்தியா

பாகிஸ்தானில் 15 ஆயிரத்தைக் கடந்த கரோனா பலி 

7th Apr 2021 04:27 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட தகவலில், 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 102 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 15,026 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும், புதிதாக 4,004 பேருக்கு கரோனா பரவியுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 7,00,188 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாததற்கு 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக உணவகங்களையும், கடைகளையும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான பள்ளிகளை இன்னும் மூன்று வாரங்களுக்கு மூடு அதிகாரிகள் முடிவு செய்தனர். நாட்டில் கரோனா செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

Tags : பாகிஸ்தான் கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT