இந்தியா

ஹைதராபாத் விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

7th Apr 2021 04:15 PM

ADVERTISEMENT

துபையிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான 1.2 கி.கி. தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக ஹைதராபாத் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இந்நிலையில் துபையிலிருந்து வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ரூ.60 லட்சம் மதிப்பிலான 1.2 கி.கி. தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. 

அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தைக் கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : Gold Smuggling Gold
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT