இந்தியா

தில்லியில் புதிதாக 5,506 பேருக்கு கரோனா

7th Apr 2021 07:34 PM

ADVERTISEMENT


தில்லியில் புதிதாக 5,506 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,90,568 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,363 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 6,59,980 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,133 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 19,455 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 90,201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 6.10 சதவிகிதம்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT