இந்தியா

தில்லி: 3 நாள்களில் கூடுதலாக 2,000 கரோனா படுக்கைகள்

7th Apr 2021 11:00 AM

ADVERTISEMENT


தில்லியில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2 ஆயிரம் கரோனா படுக்கைகள் கூடுதலாக  அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கரோனா பரவல் குறித்து இன்று (ஏப்ரல் 7) சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தில்லியிலுள்ள மருத்துவமனைகளில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

தில்லியில் கரோனா அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தில்லியில் 25 சதவிகித கரோனா படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளதாக கடந்த வியாழக் கிழமை தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது கூடுதலாக 2 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT