இந்தியா

அதிகரிக்கும் கரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை (ஏப்.8) ஆலோசனை

7th Apr 2021 07:50 PM

ADVERTISEMENT

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உயா்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் அதிக அளவிலான மக்கள் தீநுண்மியால் பாதிக்கப்படக்கூடிய சூழல் தொடா்ந்து வருகிறது.

‘கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. இதனால் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  1,15,736  பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச பாதிப்பாகும். அதே நேரத்தில் 630 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,66,177 -ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi Coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT