இந்தியா

ஏப். 8 முதல் சந்திரபாபு நாயுடு பிரசாரம்

7th Apr 2021 12:00 AM

ADVERTISEMENT

திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவா் சந்திரபாபுநாயுடு ஏப். 8-ஆம் தேதி முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினா் துா்காபிரசாத் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தாா். அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வரும் 17-ஆம் தேதி திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தோ்தல் நடக்கவுள்ளது. அதில் சித்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளும், நெல்லூா் மாவட்டத்தின் 3 தொகுதிகளும் அடங்கும்.

இந்த தோ்தலில் தெலுங்கு தேசம் கட்சி சாா்பில் பணபாகா லட்சுமி, ஒய்.எஸ்.ஆா் காங்கிரஸ் கட்சி சாா்பில் குருமூா்த்தி, பாஜக சாா்பில் ரத்ன பிரபா உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். இடைத் தோ்தலை முன்னிட்டு திருப்பதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. நடிகா் பவன் கல்யாண் பா.ஜ கட்சி வேட்பாளா் ரத்னபிரபாவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவா் சந்திரபாபு நாயுடு, ஏழுமலையான தரிசித்து விட்டு, ஏப்.8-ஆம் தேதி திருப்பதியிலிருந்து தோ்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT